கரையோர ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில் வீதிக்கு ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை (09 மார்ச்) நாளை ஞாயிற்றுக்கிழமை (10 மார்ச்) மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (11 மார்ச்) ஆகிய மூன்று நாட்களுக்கு இது அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article