வடக்கின் பெரும் சமர் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம்(06,07,08 மார்ச்)என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன.

அதனடிப்படையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்ற நிலையில்  சற்று முன்னர் வரை 4விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்ட்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article