அனுமதியின்றி டோன் கேமரா பறக்க விட்டவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 2 திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது டோன்கேமரா பறக்க விட்டவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் தான் குறும்படம் ஒன்றை  தயாரிப்பதற்காகவே டோன்கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் அல்ல என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இராணுவத்தினர் கிளிநொச்சி பொலிஸாரருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம் (03.03.2024)கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article