நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (27 பெப்ரவரி) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Share this Article