பாடசாலை மாணவர்களிற்கிடையில் தாக்குதல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தரம்-6க்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் – 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆகையால் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த (22 பெப்ரவரி)வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

தரம்-6 இல் புதுமுக மாணவனாக அந்தப் பாடசாலைக்குச் சென்றுள்ளான். மறுநாளே தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் இணைந்து புதுமுக மாணவனைத் தாக்கியுள்ளனர்.

மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article