பருத்தித்துறையில் கடலில் வீழ்ந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் கடலில் வீழ்ந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (செப்ரெம்பர் 16)பிற்பகல் பலநாள் படகொன்றில் மீன்பிடிக்க சென்ற குறித்த நபர் கடலில் வீழ்ந்து உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது, சடலம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article