வடக்கில் 403 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ‘3 ஏ’!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் 409 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 161 பேர் கலைப் பிரிவிலும், 103 பேர் வர்த்தகப் பிரிவிலும், 65 பேர் கணிதப் பிரிவிலும், 72 பேர் விஞ்ஞானப் பிரிவிலும், 2 பேர் தொழில்நுட்பப் பிரிவிலும் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர 2 ‘ஏ’, பி என்ற சிறந்த பெறுபேற்றையும் 409 பேர் பெற்றுள்ளனர்.

உயர்தரப் பரீட்சையில் 10 ஆயிரத்து 763 பேர் வடக்கு மாகாணத்தில் தோற்றியிருந்தனர். சித்தி வீதம் 74 ஆகக் காணப்படுகின்றது. கடந்த முறை சித்திவீதம் 63 ஆக காணப்பட்டது. 160க்கும் குறைவானவர்களே மூன்று பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றிருந்தனர்-என்றார்.

Share this Article