யாழில் கட்டுமானப் பொருள்களை திருடியவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வீட்டுக் கட்டுமானப் பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 6 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக் கட்டுமானத்துக்காக வைக்கப்பட்டிருந்த கொமெட், மாபிள் போன்ற பொருள்களே திருடப்பட்டிருந்தன. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கேவா வசந்த் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணகளை முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளின் அடிப்படையில் 30 வயதுடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article