கர்ப்பப்பை குழாய் வெடித்து இளம் ஆசிரியை உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடமராட்சி, புலோலியில் கர்ப்பப்பை வெடித்து இளம் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புலோலி தெற்கு, காந்தியூரைச் சேர்ந்த 30 வயதுடைய அ.துளசி என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தார்.

மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இவர் நேற்று(ஓகஸ்ட் 16) புதன்கிழமை பாடசாலை செல்வதற்கு ஆயத்தமானபோது வயிற்றுக்குத்து ஏற்பட்டுள்ளது.

அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிந்துள்ளமை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை பருத்தித்துறை மருத்துவமனை இறப்பு விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொண்டார்.

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கி குழாய் வெடித்ததால் ஏற்பட்ட இரத்தப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வாசுதேவா அறிக்கையிட்டுள்ளார்.

Share this Article