தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு உடனடி உளநலச் சிகிச்சை அவசியம்!- -மருத்துவர் சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணத்தில், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சிகளும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறிய அவர், போருக்குப் பின்னர் பல்வேறு சமூக நெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் தற்கொலைக்குக் காரணமாக அமைவதாகத் தெரிவித்தார்.

தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களை, சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக உளவள ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையைப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டுமெனவும், அவ்வாறு சிகிச்சை பெறமுடியாதவர்கள் அபயம் உளவள ஆலோசனை அமைப்பின் 071071 2345 என்னும் தொலைபேசி சேவையினூடாகவும் தேவையான ஆலோசனை களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்கொலை செய்து கொள்பவர் அதனைச் சொல்லமாட்டார். ஆனால்,ஏதோவொரு வடிவில் அதனை வெளிப்படுத்துவாரெனவும், அதனை நேரடியாக
வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார்.

அதனை உணர்ந்து அவர்களுக்கு உடனடியாக உளநல ஆலோசனையைப் பெற்றுக் கொடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். நண்பர்கள், குடும்பத்தவர்கள், மற்றும் உறவினர்கள் மூலமே அவர்களை அடையாளம்கண்டு ஏதாவது ஒருவழியில் சிகிச்சைக்குக் கொண்டு வரவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article