யாழ்நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் யாழ் நகரப் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய யாழ் பஸ் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.

இரு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று(ஓகஸ்ட் 9) புதன்கிழமை யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதிவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கினார். அத்துடன் வழக்கினை 18.10.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுச் சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.

Share this Article