யாழ்ப்பாண நகரில் தேசிய கல்வி நிறுவகத்தினது புத்தக விற்பனை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தேசிய கல்வி நிறுவகத்தினது வட மாகாணத்துக்கான புத்தக விற்பனை எதிர்வரும் ஓகஸ்ட் 4,5,6 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாண நகரில் இடம்பெறவுள்ளது.

வட மாகாணக் கல்வித் திணைக்கள அனுசரணையுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

பாடசாலைப் பாடத்திட்டத்திற்கமைவான தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலான வெளியீடுகளும் 20% விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

வளநூல்கள்
மேலதிக வாசிப்பு நூல்கள்
இறுவட்டுக்கள்
செயற்பாட்டு நூல்கள்
பயிற்சி நூல்கள்
வினா -விடை நூல்கள்

இம்முறை மேலதிகமான பல்வேறு நூல்கள் விற்பனைத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரிய இச்சந்தர்ப்பத்தினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தேசிய கல்வி நிறுவகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share this Article