முன்னணி பெண் செயற்பாட்டாளர் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த பொலிஸார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி என்பவரின் வீட்டினுள் நேற்றுமுன்தினம்(ஜூலை 27) இரவு 10.45 மணியளவில் இளவாலைப் பொலிஸார் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரும் போராட்டத்திற்கு பொதுமக்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கட்சியின் மிக முக்கிய செயற்பாட்டாளர் ராஜினியை அச்சுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கிலேயே பொலிஸாரது அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இளவாலைப் பொலிஸாரது இச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

Share this Article