கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்று (ஜூலை 26) புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர்களான டாக்டர் க. ஸ்ரீதரன், டாக்டர் தனுஜா மகேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

அதிதி அறிமுக உரையினை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சு.சிவலோசனி அவர்களும் ஆசிரிய மாணவர் சார்பில் கருத்துரையை உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி பூரணி நிஷாந்தனும் ஆற்றினர்.

உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவர் சி. தினேஷ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Share this Article