சொகுசு ரயில் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த சொகுசு ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.

குறித்த ரயில், தினமும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளது.

குறித்த ரயிலில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.

ரயிலில் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article