வடமராட்சி கிழக்கில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு மாமுனைப் பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்று(ஜூலை 20) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனைப் பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படை முகாமில் வைத்துள்ள கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணிப் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Article