தனியார் பயணிகள் பஸ் மீது யாழில் இனந்தெரியாதோர் தாக்குதல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மானிப்பாய் – காரைநகர் வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் மீதும், அதன் சாரதி, நடத்துநர் மீதும் நேற்று இரவு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது.

மானிப்பாய் – காரைநகர் வீதியில் சுதுமலைச் சந்திப் பகுதியில் பஸ்ஸை வழிமறித்த இனந்தெரியாத கும்பல் ஒன்று பஸ்ஸின் கண்ணாடியை உடைத்ததுடன், சாரதி நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தியது என்று கூறப்படுகின்றது.

அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக பஸ் சாரதி பஸ்ஸை காரைநகர் நோக்கி செலுத்திச் சென்றார் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் காரைநகர் சிற்றூர்திச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காரைநகர் சிற்றூர்திச் சங்கம் தெரிவித்தது.

Share this Article