வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ். பண்ணைச் சுற்றுவட்டப் பகுதியில் நேற்று(ஜூலை 14) இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்தப் பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 04 பேருந்துகள் வவுனியாவிற்கும், 4 பேருந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேருந்துகள் மன்னாருக்கும் ,3 பேருந்துகள் முல்லைத்தீவிற்கும், 3 பேருந்துகள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பேருந்துகள் பருத்தித்துறைக்கும், 3 பேருந்துகள் காரைநகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

Share this Article