பளு தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளுக்கு பதக்கங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையேயான தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

வி. ஜெஸ்மினா 18 வயதுப்பிரிவு 71கிலோ எடைப்பிரிவில் 92 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தையும் இ.றம்மியா 20 வயதுப் பிரிவு 55 கிலோ எடைப் பரிவில் 65 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

Share this Article