ரிக்ரொக்கில் அறிமுகமாகி திருமணம் – யாழில் அநியாயமாக உயிரை இழந்த இளம்பெண்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ள நிலையில், ரிக்ரொக் மூலம் அறிமுகமாகித் திருமணம் செய்து கொண்ட அவரது கணவரே இதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சுன்னாகத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் ரிக்ரொக்கில் அறிமுகமான சீதுவையைச் சேர்ந்த இளைஞரைக் கடந்த டிசெம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார்.

தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துகின்றார் என்று தெரிவித்து இந்தப் பெண் சில மாதங்களின் முன்னர் கணவனைப் பிரிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

அவரது கணவன் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று தொடர்ச்சியாக அச்சுறுத்துகின்றார் என்று அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்திருந்ததுடன், விவாகரத்துக் கோரியும் விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் அவர் திடீரெனத் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article