யாழ்ப்பாணத்தில் நடந்த கத்திக்குத்து! – உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இளவாலை, பிரான்பற்று முருகன் கோயிலுக்கு அருகில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு, பிரான்பற்றைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜ்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(ஜூலை 9) நள்ளிரவு நடந்துள்ளது. உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் சேர்ந்து ஒருவர் மீது கத்திக் குத்து நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று(ஜூலை 10) காலை உயிரிழந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article