கனடா ஆசையால் பறிபோன 40 லட்சம் – பதுங்கியிருந்தவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வெளிநாடு அனுப்புவதாகத் தெரிவித்து 40 லட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனார். கடந்த ஒரு வருடமாக சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று(ஜூலை 5) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் பிணை வழங்கப்பட்ட சந்தேகநபர் கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாகியிருந்தார். அவர் தேடப்பட்டு வந்தநிலையில் நேற்று நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்

Share this Article