யாழ். மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக செயலாற்ற ஆனோல்ட்டுக்கு இடைக்காலத் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ். மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் செயலாளர் அஜித்குமார் ஆகியோர் அந்தப் பதவிகளில் செயலாற்ற யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் உறுப்பினர் மா.இளம்பிறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் யாப்பின்படி தலைவர் மற்றும் செயலாளர் இரு தடவைகளுக்கு மேல் அந்தப் பதவிகளில் நீடிக்க முடியாது என்றும், யாப்புக்கு முரணாக பதவிகளில் உள்ள இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் அஜித்குமார் ஆகியோரை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கி கட்டளையிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Share this Article