தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காங்கேசன்துறை, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (ஜூலை 2) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.

இந்தச் சட்ட விரோத விகாரையை அகற்றக்கோரி முன்னரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தப் போராட்டங்களுக்குப் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், போராட்டம் நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது நடைபெறும் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து வலுச் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article