கலைக்கப்பட்ட பிரதேச சபைகளை மீண்டும் அழைக்க அதிகாரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவால் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் பிரேரணை சட்டமூலமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் என்ற பெயரில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

பதவிக்காலம் நீடிக்கப்பட்ட கால எல்லை 12 மாதங்களைக் கடந்துள்ளபோதும், கலைக்கப்பட்ட அதிகார சபைகளை அமைச்சரால் தீர்மானிக்கப்படுகின்ற பிறிதொரு காலப் பகுதியில் கூட்டுவதற்கு முடியுமாக இருந்தல் வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article