வீடு உடைத்து நகை,பணம் திருட்டு!- பொலிஸார் தீவிர விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்று (ஜூன் 18) கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் நேற்றிரவு அவரின் வீட்டினை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அவரை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

கொள்ளையர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடி 19 பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

வயோதிப பெண்மணியின் காதில் இருந்த தோடினையும், மிரட்டி பறித்துச் சென்றுள்ளதாக தெரியவருவதுடன் தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share this Article