தெணியான் அவர்களின் உருவச்சிலை திறப்பும் நூல் வெளியீடும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

“சாகித்ய ரத்னா” தெணியான் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்ததின நிகழ்வும் தெணியான் அவர்களின் உருவச்சிலை திறப்பும் “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்” நூல் வெளியீடும் நாளை(ஜூன் 10) மு.ப 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கலையருவி, கொற்றாவத்தையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை கவிஞர் இ.த. ஜெயசீலன் (ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகரசபை) தலைமை தாங்கவுள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

1.தெணியான் அவர்களின் உருவச்சிலை திறப்பு

2.தலைமையுரை

3.உருவச்சிலை திறப்புரை : திரு சோ.தேவராஜா (சட்டத்தரணி பதில்நீதிவான், மல்லாகம் நீதி மன்றம்)

4.நூல் வெளியீட்டுரையும் கருத்துரையும்: எழுத்தாளர் திரு மு. அநாதரட்சகன்

5. தெணியான் பற்றிய நினைவுப் பகிர்வுகள்: 1.கலாநிதி ந.ரவீந்திரன் 2. சட்டத்தரணி தே.ரெங்கன்

6.நன்றியுரை : திரு க.பரணீதரன்

Share this Article