கிளிநொச்சி , யாழில் சடலங்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அல்வாய், மாவிலங்கடி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வியாபாரி மூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் (வயது=81) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியில் வயோதிபர் ஒருவர் வீழ்ந்திருந்ததை அவதானித்த இளைஞர் ஒருவர், அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.

எனினும் வயோதிபர் அசைவற்றுக் காணப்பட்டதால் அது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது வயோதிபர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று பருத்தித்துறை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.

உடலை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையைச் சமர்க்குமாறு அவர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

அதேவேளை, கிளிநொச்சி செல்வாநகரிலுள்ள புதுக்குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

செல்வாநகரைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணு குணசேகரம் (வயது=53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article