சண்டிலிப்பாயில் விழிப்புணர்வு செயலாற்றுகையில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சுற்றாடல் தினத்தின் இறுதி நிகழ்வாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விழிப்புணர்வு செயலாற்றுகை மற்றும் மீள் சுழற்சி பொருட்கள் உருவாக்கம் ஆகியவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(ஜூன் 5) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சண்டிலிப்பாய்,உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ப.கணேசன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் கி.ஆனந், மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் R.சோதீஸ், பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் R.J.பிரகலாதன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் V.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article