கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் முதலாவது பொறியியலாளர் பட்டம் பெற்ற மாணவி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று முதலாவது பொறியியலாளராக பட்டம்பெற்று பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று(ஜூன் 3)கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான ச.இராமலிங்கம் தலைமையில் கல்வி நிலைய அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது கல்வி நிலையத்தில் கல்வி கற்ற மாணவர்களில் முதலாவது பொறியிலாளராக பட்டம்பெற்று வெளியேறிய மாணவி பன்னீர்செல்வம் டிலக்சனா யாழ்பாணத்தின் பிரபல கணித பேராசானும் வி.சி.எம் கல்வி நிறுவன இயக்குனருமான  பாலசிங்கம் ரவீந்திரனால் கௌரவிக்கப்பட்டார்.
சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தினர், சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கணித பேராசான் பாலசிங்கம் ரவீந்திரன், கல்வி நிலைய ஆசிரியர்கள்,புலம்பெயர் தேசநலன்விரும்பிகள்,பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Share this Article