தேவாலய திருவிழாவில் 25 பவுண் நகைகள் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் திருவிழாவின்போது சுமார் 25 பவுண் நகைகள் பக்தர்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

நகை திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம்(மே 31) மூன்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சன நெரிசலைப் பயன்படுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன. நகைகளைப் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. நகைகளைப் பறிகொடுத்த ஏனையோர் இன்று முறைப்பாடுகள் செய்யலாம் என்று கூறப்படுகின்றது.

முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article