தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்ற இளம் ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செலவர், கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் பிறந்த நாள் அற நிதியச் சபையின் இந்த ஆண்டிற்கான (2023) இளைய தலைமுறை ஆற்றலர் விருது நேற்று (மே 28) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களது 62 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை பீடாதிபதி பு.ரவிராஜனும் கலந்து சிறப்பித்தனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் மற்றும் சமூகப் பெரியவர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விருது வழங்கும் விழாவில் வைத்திய கலாநிதி வேலாயுதப்பிள்ளையும் சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பிறேமினி பொன்னம்பலமும் இளைய தலைமுறை ஆற்றலார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு மிகவும் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

Share this Article