யாழ் சிறைக் கைதி ஒருவர் வேறு சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென் பகுதியைச் சேர்ந்த கைதி ஒருவர் தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி நேற்று (மே 27) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரின் உத்தரவின்படி 12.02.2023 அன்று குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு B2 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஸ் கார்டன் வீதி, வில்பிட்ட அக்குரஸ்ஸ மாத்தறை என்ற இடத்தை சேர்ந்த 41 வயதுடைய புஷ்பகுமார போல் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பல திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கைதி நேற்று சிறைச்சாலையின் கூரையில் ஏறி தன்னை யாழ்.சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

Share this Article