அச்சுவேலியில் முதியவரை மோதித் தள்ளிய கப் ரக வாகனம்!- சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அச்சுவேலி வல்லை – பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று(மே 27) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் அச்சுவேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய சந்திரகாந்தன் என்கின்ற முதியவர் தனது வீட்டுச் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த வேளை வீதியால் பயணித்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

வாகனத்தை செலுத்தியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும், அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவெலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article