வயலுக்குள் பாய்ந்த இ.போ.ச பஸ் ஜேசிபி உதவியுடன் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.
இன்று(மே 21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது.
அதிஷ்டவசமாக இ.போ.ச.பஸ் பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பஸ்ஸில் ஒரு சில  இ.போ.ச ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் பஸ்ஸில் ஏறும் படி பலத்த சேதமானது.
Share this Article