யாழ். மாநகர சபைக்கு நல்லூர் ஆலயத்தினரால் காளாஞ்சி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பெருந்திருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்று (மே 20) பெருவிழா நாள்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தால் கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி யாழ் மாநகரசபை வளாகம் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Share this Article