நாரந்தனையில் சிறப்புச் சொற்பொழிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.நாரந்தனைச் சரவணை கர்ணந்தோட்டம், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய் யப்பட்ட சிறப்புச் சொற்பொழிவு, மேற்படி ஆலயத்தின் பிரதான மண்டபத்தில், கந்தன் புகழ்பாடும் பாமாலை என்னும் தொனிப் பொருளில், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் மாதம் 04 ஆம் திகதி வரை, தினமும் மாலை 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சிவநெறிப் பிரகாசகர், சமய ஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவை, சைவப்புலவர்களான கமலநாதன்,கந்த.சத்தியதாசன்,குமரன், பொன்.சந்திரவேல் ஆகியோரும், இளம் சைவப்புலவர்களான நவநீதன்,மற்றும் நித்தியபாபுதரன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

நிறைவாக, சொற்பொழிவிலிருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டு, சரியான பதில்களைக் கூறும் மாணவர் களுக்கு பாராட்டுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

 

Share this Article