கோப்பாயில் நாளை நடைபெறவுள்ள இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், கேள்வர் நாம் அமைப்பு என்பன இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (மே 13) நடைபெறவுள்ளது.

விபத்தில் உயிரிழந்த அமரர் மகிந்தனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை சரவணபவானந்தா பாடசாலைக்கு அருகில் உள்ள கோப்பாய் மாதர் சங்கக் கட்டடத்தில் இரத்ததான முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், குருதிக் கொடை ஆர்வலர்களையும் உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0766622218, 0766687754, 0774583973 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share this Article