தீவுப்பகுதியில் போட்டியிடும் கட்சிகள் விவரம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடக்க இருக்கும் பிரதேசசபை தேர்தலில் 2023 தீவுப்பகுதியில் போட்டியிடும் நிராகரிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் பெயர் விவரங்கள்.

நெடுந்தீவு பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேசசபை
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேலணை பிரதேசசபை
தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி. ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

Share this Article