03 ஆவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதன் தொடக்கம் வடக்கிற்கு 03 ஆவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!

வடக்கு மாகாணத்திற்கான 03 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர் உட்பட்ட முன்களச் செயற்பாட்டாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதன் தொடராக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் அருவிக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article