ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை தேசிய மட்டத்தில் முதலாம் இடம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
ஆதார வைத்தியசாலை ஊர்காவற்துறையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்பிற்காக (OPD Injury Surveillance) முதல் இடத்தினையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
நேற்று(29.10.2021) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 2020ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை பராமரிப்பு(Secondary care) வைத்தியசாலைகளில் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருதுகளை பெற்றுக்கொண்டது. வைத்தியசாலையின் Injury Surveillance Team மற்றும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள்
Share this Article