தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொவிட் 19 தொற்றால் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் (ஜீலை 29) கொவிட் 19 தொற்றால் மரணமடைந்துள்ளார்.

குடந்த ஒரு வாரமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அடையாளம் காணப்பட்டு வந்த அவர் இன்றைய தினம் நண்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அச்சுவேலியினை சேர்ந்த ராஜா ரமேஸ்குமரன் (வயது 44) தெல்லிப்பளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே மரணமடைந்தவர் ஆவார்.

கோவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சுய நினைவற்ற நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சசை அளித்து வந்தபோதும் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார்.

இன்றுவரை 124 பேர் கொவிட் 19 நோயினால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர்.

Share this Article