100 குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தந்தை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை மூலம் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.


அன்றாடம் தொழில் வாய்ப்பினை இழந்து தவிக்கின்ற மேற்படி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் நூறு குடும்பங்களை தேர்வு செய்து ஒரு குடும்பத்திற்கு தலா ரூபாய் 1900.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது,


இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு தந்தை செல்வநாயம் அறக்கட்டளை நிலையத்தின் தலமை அறங்காவலர் சட்டத்தரணி எஸ்.சி.சி இளங்கோவன் அவர்கள் தலமையில் நேற்றைய தினம் (ஜீன் 29) இடம் பெற்றது.

Share this Article