துறையூர் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடலாமையின் நீளம் 28 இஞ்சி ,அகலம் 22 இஞ்சி மற்றும் சுற்றளவு 63 இஞ்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (June – 21) இந்த கடலாமை கரையொதுங்கியதை மீனவர்கள் அவதானித்ததுடன் இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

கடந்த நாட்களில் புங்குடுதீவு நெடுந்தீவு ஊர்கவற்துறை பிரதேசங்களிலும் இறந்த நிலையில் ஆமைகள், டொல்பின் போன்றன கரையொதுங்குகின்ற விடயம் மக்கள் மத்தியில் ஓர் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது

Share this Article