இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினால் உணவுகளற்ற (NFRI) பொருட்கள் வழங்கி வைப்பு.
இச் செயற்றிட்டம் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நெடுந்தீவு கிளைக்குழுவின் தலைவா் திரு.எட்வேட் அருந்த சீலன் அவா்கள் தலமையில் நேற்யை தினம் (மாா்ச் 27) இடம் பெற்றது.
இச் செயற்றிட்டத்தில் நெடுந்தீவினை சோ்ந்த புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட 84 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொருட்கள் (NFRI) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது. தற்காலத்தின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையினைக் கருத்திற் கொண்டு செயற்றிட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் 30.03.2021 செவ்வாய்கிழமை இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினரால் முப்பது கர்பிணித்தாய்மார்களுக்கான இலவச கருத்தரங்கம் நடைபெற்று சுகாதாரப்பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
புரவிப்புயலின் தாக்கத்தின் பின்னா் சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியுதவியுடன் பல்வேறு செயற்பாடுகளைக் குறிகிய காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ முகாமினை செயற்படுத்தியமை, நிதிப்பங்களிப்பு வழங்கியமை, கிணறுகள் துப்பரவு செய்தமை, வீதிகள் துப்பரவு செய்தமை, சுகாதார செயற்பாடுகுள் போன்ற பல செயற்பாடுகளினை செஞ்சிலுவைச் சங்கம் புரவிப்ப புயலின் பினனா் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதுடன் அதற்கு முன்னரும் நெடுந்தீவில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.