தீவகம் வடக்கு வேலைணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பாரளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவா்கள் தலமையில் நேற்று (ஜனவாி 25) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை, வேலணை பிரதேச செயலகர் திரு.அம்பலவாணர் சோதிநாதன், வேலணை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு நிர்மலன் நிரோஜன், வேலணை பிரதேச சபை தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,செல்வராசா கஜேந்திரன், வேலணை பிரதேசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் வேலணை பிரதேச செயலகத்தில் Covid – 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.
இந்த கூட்டத்தொடரில் வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சனை, கால்நடை வளர்ப்பு தொடர்பாக, சமூக உட்கட்டமைப்பு தொடர்பாக, கல்வி,சுகாதாரம், விவசாயம், கட்டாக்காலி கால்நடைகள், வீடமைப்பு என பல்வேறு விடயங்கள் சம்மந்தமாகவும் பல துறைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
முக்கியமாக தீவகப்பகுதிகளில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை பற்றியும், ஆசிரியர் வளப்பற்றாக்குறை பற்றியும், கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பிரச்சனை பற்றியும், அரச பேரூந்து வருகை பற்றியும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தொடரை தொடர்ந்து சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான, சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பாடசாலை மாணவர்களுக்கான சமுர்த்தி “சிப்தொர புலமைப்பரிசில்” கல்விக்கான
ஊக்குவிப்பு கொடுப்பனவினை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் வழங்கிவைத்தார்