யாழ் பல்கழைக்கழகத்தில் வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவா்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு கோாி உணவுத் தவிா்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் இரவு வரை ஈடுபட்டு வந்தனா்.
பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய முகப்பின் முன்னால் குறித்த மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்த நிலையில், அந்த மாணவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றிரவு பத்து மணியளவில் நேரில் சென்றுள்ளார்
அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், மனிதாபிமான அடிப்படையில் வகுப்புத் தடை விலக்கப்பட்டுள்ள செய்தியைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.