மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘மஞ்சள்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (01.08) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02/08) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்று நிறைந்த சூழல் இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
இதற்கிடையில், சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.