கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் (System Update) பணிகள் காரணமாக, நாளை (19/11) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை (Vehicle Revenue License) வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த ஐந்து நாட்களுக்கு மேல் மாகாணத்திற்குட்பட்ட எந்தவொரு அலுவலகத்திலிருந்தோ அல்லது இணையவழி (Online) மூலமாகவோ வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாகப் பொதுமக்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ள திணைக்களம், கணினி மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வழமை போன்று அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.