தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு (ஜூன் 30) 11 மணியளவில் உயிரிழந்தர் அவருக்கு வயது 91 ஆகும்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்படவுள்ளதோடு, அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.